டொராண்டோ மற்றும் தெற்கு ஒன்ராறியோவின் சில பகுதிகளுக்கு கடும் பனிப்பொழிவு எச்சரிக்கை!
கடும் பனிப்பொழிவு எச்சரிக்கை டொராண்டோ,மற்றும் தெற்கு ஒன்ராறியோவின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளது பனிப்பொழிவு எச்சரிக்கை; எதிர்பார்க்கப்படும் 15-25 சென்டிமீட்டர் அளவிலான பனிப்பொழிவு இடம்பெற வாய்ப்புள்ளதாக சுற்றுச்சூழல் கனடா ஞாயிற்றுக்கிழமை விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
பனிப்பொழிவு முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை இரவில் இருந்து திங்கட்கிழமை காலை வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
தேசிய வானிலை நிறுவனம் இரண்டு சுற்றாக இந்த பனிப்பொழிவு இடம்பெறும் என எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளது
“முதல் சுற்று ஞாயிற்றுக்கிழமை இரவில் இருந்து திங்கட்கிழமை அதிகாலை வரை 5 சென்டிமீட்டர் பனி பொழியும் எனவும் இது நண்பகல் வரை நீடிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது . Lake Erie க்கு அண்மித்த பகுதிகளில் அதிகளவாக 10 சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவு இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது
திங்கட்கிழமை பிற்பகல் அளவில் பனிப்பொழிவு குறைவடைந்து இரண்டாவது சுற்று திங்கள்கிழமை மாலை ஆரம்பித்து செவ்வாய்க்கிழமை காலை வரை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது இதில் 15 முதல் 20 சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments