Header Ads

பிரான்சில் மோப்ப நாய்களால் கொரோனா வைரசினை கண்டுபிடிக்க புதிய முயற்சி !!

 


மோப்ப நாய்களால் கொரோனா வைரசினை அடையாளம் கண்டுபிடிக்க முடியுமா என புதிய பரிசோதனை முயற்சி ஒன்று இடம்பெற உள்ளது. 

 
வரும் புதன்கிழமை பெப்ரவரி 17 ஆம் திகதி இந்த பரிசோதனை முயற்சி இல் து பிரான்ஸ் மாகாணத்துக்குள் இடம்பெற உள்ளது. l'Ecole nationale vétérinaire d'Alfort இந்த பரிசோதனைகளை வழங்க, பல்வேறு அமைப்புகள் இதனை நேரடியாக கண்டு உறுதிப்படுத்த உள்ளதாக அறிய முடிகிறது. 
 
பிரான்சில் முதன் முறையாக இந்த முயற்சி இல் து பிரான்ஸ் மாகாணத்தினால் முன்னெடுக்கப்பட உள்ளது. இந்த பயிற்சிகளுக்காக கிட்டத்தட்ட 2,000 பேர் வரை உழைத்துள்ளனர். 
 
பயிற்சிவிக்கப்பட்ட நாய்கள், கொரோனா வைரசினை இலகுவில் கண்டறியும் எனவும், பல விதங்களில் இந்த மோப்ப நாய்களின் உதவி தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.