நீசில் பகுதிநேர உள்ளிருப்பு - சுகாதார அமைச்சர் ஒலிவியே வெரோன்!!
நீஸ் நகரத்தில் ஒரு நாளைக்கு 500 பேரிற்கு மேல் கொரேனாத் தொற்றிற்கு உள்ளாகின்றனர் என இன்று நீசிற்குச் சென்றிருந்த பிரான்சின் சுகாதார அமைச்சர் ஒலிவியே வெரோன் தெரிவித்துள்ளார்.
அங்கு மிகவும் மோசமான கொரேனாப் பரவல் இருப்பதால், மிகவும் கடுமையான சுகாதாரக் கட்டுப்பாடுகளைக் கண்காணிக்கும்படியும் தெரிவித்துள்ள ஒலிவியே வெரோன், 3500 அலகுகள் Pfizer கொரேனாத் தடுப்பு ஊசிகளையும், ஆயிரக்கணக்கான AztraZeneca கொரோனாத் தடுப்பு ஊசிகளையும், திங்கட்கிழமையில் இருந்து நீஸ் நகரத்திற்கு அனுப்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
நீஸ் நகரம் அமைந்துள்ள Alpes-Maritimes இன் மாவட்டங்களிற்கு, முழுமையான, அல்லது பகுதி உள்ளிருப்பை அறிவிக்கும் சாத்தியம் உள்ளதெனவும், நாளை மாவட்ட ஆணையருடன் மீண்டும் சந்திப்பதாகவும் ஒலிவியே வெரோன் தெரிவித்துள்ளார்.
நிலைமை மேலதிகக் கட்டுப்பாடுகளை விதிக்கும் தேவையை உணர்த்தி நிற்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்
No comments