Header Ads

இலங்கை- இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு ஓர் மிக மகிழ்ச்சி தரும் செய்தி!



கடுமையான சுகாதார வழிகாட்டுதலின் கீழ் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இரு நாடுகளுக்குமிடையில் ஏற்பட்ட புரிந்துணர்வின் அடிப்படையில் விமான பயணத்தின் போது ஏயார் பபிள் (air bubble) என்று அழைக்கப்படும் நடவடிக்கையின் ஊடாக இரு நாடுகளுக்குமிடையிலான விமானப் போக்குவரத்துக்கள் இயங்கும் என அமைச்சர் கூறியுள்ளார்.

இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகரியாலயம் இது தொடர்பான திட்டங்களை வெளியுறவு மற்றும் சுற்றுலா அமைச்சகங்களுக்கு சமர்ப்பித்துள்ளது.இலங்கை, இந்தியா ஆகிய இரு நாடுகளிலும் சுகாதார விதிமுறைகளின்படி, இந்த திட்டத்தை நடத்துவதில் இரு நாடுகளின் கவனமும் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

இத்தோடு இதுதொடர்பில் உடன்பாடு தெரிவிக்கப்படுமாயின், இந்த திட்டத்தை ஆரம்பிக்க முடியும் என்று இந்திய தூதுவர் கோபால் பாக்லே அரசாங்கத்திற்கு ஆலோசனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக இந்த ஆலோசனை தொடர்பில் நாட்டின் சுகாதார அதிகாரிகள் மற்றும் கொவிட் தொற்றை கட்டுப்படுத்தும் குழுவினருடன் விரைவாக பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

இதேவேளை கடந்த ஜனவரி மாதத்தில் 1682 சுற்றுலாப் பயணிகள் வருகைதந்திருப்பதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.கொவிட் -19 தொற்றுக்கு பின்னர் சுற்றுலாப் பணிகளுக்காக நாடு கடந்த 21 ஆம் திகதி திறக்கட்டமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.