Header Ads

யாழ். போதனா வைத்தியசாலையில் நோயாளர்களைப் பார்வையிட ஒருவருக்கு மட்டுமே அனுமதி!



யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளர்களைப் பார்வையிட இன்றிலிருந்து ஒருவருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என யாழ். போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், “யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையானது வடக்கு மாகாணத்தில் உள்ள நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதில் பெரும் பங்காற்றுகிறது. இந்நிலையில், கடந்த வாரம் ஏற்பட்ட சில தடங்கல் நிலை காரணமாக எமது வைத்திய சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.

அண்மையில், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதன் காரணமாக வைத்தியசாலையில் சில பிரிவுகள் மூடப்பட்டதோடு தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிலையில், இந்த நிலைமை விரைவில் சீராக்கப்பட்டு எதிர்வரும் ஐந்தாம் திகதியிலிருந்து யாழ். போதனா வைத்தியசாலையின் வழமையான செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களைப் பார்வையிட ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்” என அவர் கூறியுள்ளளார்.

No comments

Powered by Blogger.