எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாக அமைச்சர் முக்கிய அறிவிப்பு !
அடுத்த மூன்று மாதங்களுக்குள் எரிபொருள் விலையில் அரசாங்கம் எந்தவித மாற்றங்களையும் மேற்கொள்ளாது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
2019 செப்டம்பரில் இறுதியாக நல்லாட்சி அரசாங்கம் எரிபொருள் விலையை அதிகரித்தமைக்கு பின்னர் தற்போதைய அரசாங்கம் இதுவரை எரிபொருள் விலை அதிகரிக்கவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளபோதும் எரிபொருள் விலையை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
No comments