Header Ads

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம்.. 5 மாநிலங்களில் தேர்தல்கள் எப்போது?

 


டெல்லி: தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி, அசாம் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் தேதி இன்று மாலை வெளியிடப்பட்டது. டெல்லியில் மாலை 4.30 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்தார் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா. அப்போது இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். கடந்த இரண்டு மாதங்களாக ஐந்து மாநிலங்களிலும் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் செய்து கொண்டிருந்தது. டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள, தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு, சுனில் அரோரா தலைமையிலான தேர்தல் ஆணையர்கள் குழு விசிட் செய்தது. அப்போது, மாநில தேர்தல் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. தமிழகத்தை பொறுத்தளவில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தி 2 நாட்களுக்குள் தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்பது பெரும்பான்மையான கட்சிகளின் கோரிக்கையாக இருந்தது. ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு என்பதாலும், மே மாதம், 12ம் வகுப்புக்கான தேர்வு நடைபெறும். இதை கருத்தில் வைத்து தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் என்று தமிழ அரசியல் கட்சிகள் கோரிக்கைவிடுத்திருந்தன.


No comments

Powered by Blogger.