கொரோனா தொற்றிலிருந்து மேலும் 447 பேர் குணமடைவு!
நாட்டில் மேலும் 447 பேர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்றிலிருந்து மீண்டோரின் மொத்த எண்ணிக்கை 76 ஆயிரத்து 961 ஆகப் பதிவாகியுள்ளது.
இதேவேளை, இலங்கையில் இதுவரை 81ஆயிரத்து 467 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் அவர்களில், இன்னும் நான்காயிரத்து 49 பேர் தொடர்ந்து சிகிச்சைபெற்று வருகின்றனர். அத்துடன், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 457ஆகப் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments