ஒரே நாளில் இல் து பிரான்சுக்குள் 350 பேருக்கு தண்டப்பணம்
நேற்று வெள்ளிக்கிழமை இரவு, இல் து பிரான்சுக்குள் 350 பேருக்கு தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.
நேற்றைய இரவில் 800 காவல்துறையினர் தீவிர வீதி சோதனையில் ஈடுபட்டனர். மொத்தமாக 3,500 சோதனைகளை மேற்கொண்டிருந்தனர். இவர்களில் போதிய ஆவணங்கள் இன்றி பயணித்த 350 பேருக்கு தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.
இவர்களில் 34 பேர் முகக்கவசம் அணியாத குற்றத்துக்காக தண்டப்பணம் செலுத்தியுள்ளனர். 305 பேர் பயணச் சான்றிதழ் இல்லாத குற்றத்துக்காக தண்டப்பணம் செலுத்தியுள்ளனர்.
மேற்கொள்ளப்பட்ட மொத்த சோதனைகளில் கிட்டத்தட்ட 10% வீதமானோர்கள் தண்டப்பணம் செலுத்த நேர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments