Header Ads

கடந்த 24 மணி நேரத்திற்குள் இல்-து-பிரான்சில் மட்டும் 50 பேர் சாவடைந்துள்ளனர்


 பிரான்சில் வைத்தியசாலையில் 328  பேர் கடந்த 24 மணி நேரத்திற்குள் (20.02.2021)  சாவடைந்திருக்கும் நிலையில்,    இல்-து-பிரான்சில் மட்டும் 50 பேர் சாவடைந்துள்ளனர். இத்துடன் இல்-து-பிரான்சின் கொரோனாச் சாவுகள் 14.463  ஆக உயர்ந்துள்ளது.


இங்கு 4.949 பேர் வைத்தியசாலைகளில் கொரோனாத் தொற்றினால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீவிரசிகிச்சைப் பிரிவில் 762 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது இல்-து-பிரான்சின் தீவிரசிகிச்சைக் கொள்ளளவின் 66% ஆகும்.

100.000 பேரிற்கான கொரோனாத் தொற்று விகிதம் ( taux d'incidence) இல்-து-பிரான்சில் 250  ஆக மீண்டும் அதிகரித்துள்ளது.


இல்து-பிரான்சின் மாவட்டங்களில்

    Paris - வைத்தியசாலையில்  886 பேர் -   3.1264  பேர் சாவு  (+12)
    La Seine-Saint-Denis - வைத்தியசாலையில்  687 பேர் - 1.754 பேர் சாவு (+2)
    Le Val-de-Marne- வைத்தியசாலையில் 586 பேர் - 2.178 பேர் சாவு (+2)
    Les Hauts-de-Seine- வைத்தியசாலையில் 799 பேர் -  1.949 பேர் சாவு (+4)
    Les Yvelines- வைத்தியசாலையில்  563 பேர் - 1.335 பேர் சாவு (+1)
    Le Val-d'Oise- வைத்தியசாலையில்  384 பேர் - 1.389 பேர் சாவு (+7)
    L'Essonne- வைத்தியசாலையில்  628  பேர் -  1.309 பேர் சாவு (+4)
    La Seine-et-Marne - வைத்தியசாலையில்  416 பேர் -  1.433 பேர் சாவு (+2)

No comments

Powered by Blogger.