கடந்த 24 மணி நேரத்திற்குள் 404 பேர் சாடைந்துள்ளனர்
தொடர்ச்சியான ஊரடங்குக் கட்டுப்பாடு வலுப்படுத்தப்பட்டிருக்கும் நிலையிலும், கொரோனாத் தொற்றும், கொரோனாச் சாவுகளும் உச்சத்தை நோக்கிச் சென்று, நாளிற்கு நாள், மிகவும் ஆபத்தாகவும் மோசமாகவும் சென்று கொண்டு இருக்கின்றது.
கடந்த 24 மணி நேரத்திற்குள் 404 பேர் சாடைந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலங்களில்இதனால் மொத்தச் சாவுகள் 76.512 ஆக உயர்ந்துள்ளது.
வைத்தியசாலைகளில் மட்டும் மொத்தமாக 54.213 பேர் சாவடைந்துள்ளனர்.
28.029 கொரோனத் தொற்று நோயாளிகள் தற்சமயம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நோயாளிகளின் எண்ணிக்கை நாளிற்கு நாள் உச்சத்தை எட்டுகின்றது.
3.270 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர். எண்ணிக்கை அதிகரித்து ஆபத்தை உணரத்தி நிற்கின்றது.
கடந்த 24 மணி நேரத்திற்குள் மட்டும், வைத்தியசாலைகளில் 2.189 பேர்அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் 369 பேர்அனுமதிக்கப்பட்டுள்ளனர்
No comments