Header Ads

பிரான்சில் கடந்த 2020 ஆண்டு 279 பேருக்கு மட்டுமே அகதி அந்தஸ்து வழங்கப்பட்டது !!



பிரான்சின் அரசியல் தஞ்சக் கோரிக்கைக்கான தேசிய நீதிமன்றத்தினால் Cour National du Droit D'Asile) 279 பேருக்கு மட்டுமே 2020ம் ஆண்டு அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளதா தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக 1025 இலங்கையர்கள் அரசியல் தஞ்சம் கோரியிருந்துள்ளனர்.
இது தொடர்பில் ஊடகவியலாளர் சிவா சின்னப்பொடியின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டவர்களில் 252 பேருக்கு முழுமையான அரசியல் தஞ்சமும் 27 பேருக்கு தற்காலிக பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. பிரான்சில் அரசியல் தஞ்சம் கோரிய இலங்கையர்களில் 225 பேர் பெண்கள் ,800 பேர் ஆண்களாகும். இதில் 60 பெண்களுக்கும் 192 ஆண்களுக்கும் முழுமையான அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளது.20 பெண்களுக்கும் 7 ஆண்களுக்கும் தற்காலிக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் பிரான்சில் மொத்தமாக 42025 அரசியல் தஞ்ச வழக்குகள் அரசியல் தஞ்சக் கோரிக்கைக்கான தேசிய நீதிமன்றத்தில்(ஊNனுயு) பதிவு செய்யப்பட்டன.இதில் 6116 பேருக்கு முழுமையான அரசியல் தஞ்சமும் 4138 பேருக்கு தற்காலிக பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.(உழனந12)மொத்தமாக 10254 பேர் அரசியல் தஞ்சம் பெற்றுள்ளனர்.
கடந்த வருடம் பிரான்சில் அரசியல் தஞ்சம் கோரியவர்களில் இலங்கையர்கள் 14 வது இடத்தில் உள்ளனர்.முதலாவது இடத்தில் கினே (புரinèந) நாட்டவர்களும் இரண்டாவது இடத்தில் பங்களாதேசியர்களும் மூன்றாவது இடத்தில் பாகிஸ்தானியர்களும் உள்ளனர்.
கடந்த வருடம் 13618 வழக்குகள் வலுவான காரணங்கள் இல்லாமையால் விசாரணைக்கு எடுக்கப்படாமல் நிராகரிக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்

No comments

Powered by Blogger.