Header Ads

ரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 77ஆயிரத்தைக் கடந்தது!



ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 77ஆயிரத்தைக் கடந்தது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ரஷ்யாவில் இதுவரை மொத்தமாக 77ஆயிரத்து 068பேர் உயிரிழந்துள்ளனர்.

கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் ரஷ்யாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் தொற்றினால் 39இலட்சத்து 83ஆயிரத்து 197பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ரஷ்யாவில் 15ஆயிரத்து 916பேர் வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்ததோடு, 407பேர் உயிரிழந்துள்ளதாக, ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நான்கு இலட்சத்து 34ஆயிரத்து 038பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுதவிர, ரஷ்யாவில் இதுவரை மொத்தமாக 34இலட்சத்து 72ஆயிரத்து 091பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.