குடும்பத்தினருடன் தகராறு..நீர்த்தேக்கத்தில் குதித்து உயிரை மாய்த்த 16 வயது பாடசாலை மாணவி..!!
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் மிதந்துகொண்டிருந்த நிலையில் பாடசாலை மாணவியின் சடலம் இன்று (12) காலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மலையகம் தலவாக்கலைப் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் 11ஆம் தரத்தில் கல்விகற்கும் இந்த மாணவி, இன்று காலை 6.30 மணியளவில் வீட்டை விட்டுச் சென்றுள்ளார்.பின்னர், நீர்த்தேக்கத்துக்கு சென்று அங்கிருந்து குதித்ததை கண்ட பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
மரண விசாரணைகளுக்காக சடலம் நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments