Header Ads

இன்று Drancy நகரில் எமனாக மாறிய சிகரெட்! - தீ விபத்தில் பெண் சாவு!!

 


Drancy நகரில் உள்ள கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து பெண் ஒருவர் சாவடைந்துள்ளார். 

 
இன்று ஞாயிற்றுக்கிழமை இத்தீ விபத்து பகல் 2.15 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. Drancy, Seine-Saint-Denis நகரின் Cité Marcel Cachin தொகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றே இவ்வாறு தீவிபத்துக்குள்ளாகியுள்ளது. 14 அடுக்குகள் கொண்ட அந்த கட்டிடத்தின் ஆறாவது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 
 
விபத்தை அடுத்து கட்டிடத்தில் வசித்த 70 பேர் வெளியேற்றப்பட்டனர். இவ்விபத்தில் பெண் ஒருவர் உடல்கருகி சாவடைந்துள்ளனர், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். 
 
காவல்துறையினர் மேற்கொண்டுவரும் விசாரணைகளில், சிகரெட் ஒன்று சோபா இருக்கையின் மீது தவறி விழுந்ததை அடுத்து தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்

No comments

Powered by Blogger.