Header Ads

பிரித்தானிய எல்லையை மூட வேண்டும் தொற்றுநோயியல் நிபுணர் எச்சரிக்கை

 


பிரித்தானியா மற்றும் பிற நாடுகளில் தற்போது புதிய உருமாறிய கொரோனா பரவல் அதிகரித்து காணப்படுகின்றது.

அதனால் பிரித்தானியா உடனான எல்லைகளை மூடுவது குறித்து பிரான்ஸ் பரிசீலிக்க வேண்டும் என்று அந்நாட்டு தொற்றுநோயியல் நிபுணரும் அரசாங்க ஆலோசகருமான Arnaud Fontanet எச்சரித்துள்ளார்.

பிரான்ஸ் தொற்றுநோயியல் நிபுணரும் அரசாங்க ஆலோசகருமான Arnaud Fontanet தெரிவிக்கையில் குறிப்பாக பிரித்தானியா மற்றும் அயர்லாந்து நாடுகளுடனான எல்லைகளை நாம் மூட வேண்டுமா என்பதை ஆலோசிப்பது அவசியம் ஆகும்

பிரான்சின் மத்திய தரைக்கடல் துறைமுகமான Marseille மற்றும் ஆல்ப்ஸில் உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதுவகை கொரோனா மிகவும் தீவிரமடைவதால் தற்போது அதன் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.

மார்ச் மாத இறுதிக்குள் பிரான்ஸ் 10 முதல் 15 மில்லியன் மக்களுக்கு ஜூன் இறுதிக்குள் 25 முதல் 30 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டிய கட்டாயத்தில் பிரான்ஸ் உள்ளது என்றும் Arnaud Fontanet தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.