Header Ads

ரஷ்யாவில் இனங்காணப்பட்ட உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று

 


ரஷ்யாவிலும் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது.

அதனை அடுத்து இன்று முதல் பிரித்தானியாவிற்கான விமான போக்குவரத்து தடையை நீடித்துள்ளது.

பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்காக பெப்ரவரி 1 ஆம் திகதி இரவு 11:59 மணி வரை இந்த இடைநிறுத்தம் நீடிக்கப்பட்டுள்ளது என கொரோனா வைரஸ் தடுப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் 22 ஆம் திகதி முதல் ரஷ்யா பிரித்தானியாவிற்கான விமான போக்குவரத்தை இடைநிறுத்தியது.

பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் 40 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.