Header Ads

தொற்று அதிகரித்தால் மீண்டும் உள்ளிருப்பு தவிர்க்க முடியாதது - சுகாதார அமைச்சர்!!



 தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கினால் கொரோனாத் தொற்றின் வீதம் வீழ்ச்சியடையாமல், அதிகரித்துச் சென்றால் பிரான்ஸ் மிகவும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி வரும். அதாவது மூன்றாவது உள்ளிருப்பிற்குள் வரவேண்டிய நிலை தவிர்க்க இயலாததாக இருக்கும் என, இன்று தொலைக்காட்சியில் செவ்வியளித்த பிரான்சின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 
பிரித்தானிய வைரசின் தொற்றை நிறுத்துவதற்கு, நாம் ஒவ்வொரு நிமிடத்துடனும் போராடி வருகின்றோம். பிரித்தானியா வைரஸ் என்பது, தற்போதைய வைரஸ் போன்றதே. அனால் 50 இலிருந்து 70 சதவீதம் மிக விரைவாகப் பரவக்கூடியது. இதனால் இது ஆபத்தானது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
தற்போது தட்டுப்பாட்டில் உள்ள கொரோனாத் தடுப்பு ஊசிகளிற்கான தீர்வுகள் உடனடியாக எட்டப்படும். மற்றைய கொரோனாத் தடுப்பு ஊசிகளும், ஐரோப்பிய மற்றும் பிரான்சின் சுகாதார உயர் ஆணையத்தினால் அங்கீகரிக்கப்பட்டால், எதிர்வரும் ஓகஸ்ட் 31ம் திகதிக்குள் தடுப்பு ஊசி போட விரும்பும் அனைத்து பிரெஞ்சு மக்களிற்கும் கொரோனாத் தடுப்பூசிகள் போடப்பட்டுவிடும் என நம்புகின்றேன் எனவும் ஒலிவியே வெரோன் இன்றைய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
 

No comments

Powered by Blogger.