இலங்கையில் தனிமைப்படுத்தல் பகுதிகள் விடுவிப்பு
இலங்கையில் சில பகுதிகள் நாளை காலை 05 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய நாரஹென்பிட்டி காவற்துறை பிரிவுக்குட்பட்ட 100ஆம் தோட்டம் பகுதியும்,பேலியகொடை காவற்துறை பிரிவுக்குட்பட்ட கங்கபட கிராமசேவக பிரிவின் 90ஆம் தோட்டம் பகுதியும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட உள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments