அமெரிக்காவில் கார் திருடனின் செயலால் அதிர்ச்சிக்குள்ளாகிய தாய்….
அமெரிக்காவில் Beaverton என்ற இடத்திலுள்ள கடை ஒன்றின் முன் தன் காரை நிறுத்திவிட்டு, எஞ்சினை அணைக்காமலே கடைக்கு பொருட்கள் வாங்கச் சென்றார் Crystal Leary.
அப்போது, கார் திருடும் நபர் ஒருவர் Crystalஇன் காரை திருடிச் சென்றுள்ளார்.
சற்று தூரம் சென்ற பிறகுதான் காருக்குள் குழந்தை ஒன்று இருப்பதை அவர் கவனித்துள்ளார்
இதற்குள் Crystalஇன் காரை ஒருவர் திருடிச் செல்வதை கவனித்த கடை ஊழியர் தகவல் தெரிவித்த அவர் தடுமாறிய நிலையில் நிற்கும் இடத்திற்கே அவரது கார் மீண்டும் அவர் அருகிலேயே வந்து நின்றுள்ளது.
காருக்குள்ளிருந்த திருடன் Crystalஐ அழைத்து, குழந்தையை தனியாக காருக்குள்ளேயே விட்டு சென்றதால் , உன்னை பொலிசில் பிடித்துக் கொடுத்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.
Crystalஇடம், குழந்தையை காரிலிருந்து இறக்கச்சொல்லிய அந்த திருடன், குழந்தை காரிலிருந்து இறங்கியதும், மீண்டும் காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து விரைந்திருக்கிறார்.
சில மணி நேரத்திற்குப் பின், அந்த கார் சற்று தொலைவில் ஓரிடத்தில் நிறுத்தப்பட்டிருந்ததை பொலிசார் கண்டு அதை மீட்டு Crystalஇடம் ஒப்படைத்துள்ளார்கள்.
மேலும் பொலிசார் திருடனை பிடிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.
No comments