வர்த்தக நிலையங்கள் மூன்று வாரங்களிற்கு நீடிக்இகும் தடை!!!
பிரான்சின் பிரதமர் ஜோன் கஸ்தெக்ஸ் வெளியிட்ட அறிக்கை பல கோள்விகளை எழுப்பியிருந்தது.
முக்கியமாக அத்தியாவசியமான உணவுப் பொருடகளின் வர்த்தக நிலையங்கள் தவிர்ந்த, ஏனைய 20.000m² இற்கு அதிகமான பரப்பளவைக் கொண்ட வர்த்தக நிலையங்கள் இன்று இரவில் இருந்த மூடப்படும் என அறிவித்திருந்தார்.
ஆனால் இது எவ்வளவு காலத்திற்கு என்ற கேள்வி இருந்தது.
தற்போது முதற்கட்டமாக, இந்தத் தடை மூன்று வாரங்களிற்கு நீடிக்இகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தொற்றின் அதிகரிப்பின் அடிப்படையில், இந்தக் கால எல்லை நீட்டிக்கப்படலாம் எனவும், வர்தகர்களின் கூட்டுச் சம்மேளனத்தின் (confédération des commerçants) தலைவர் Francis Palombi தெரிவித்துள்ளார்.
No comments