Header Ads

இத்தாலியில் தளர்த்தப்படும் கட்டுப்பாடுகள்… சுகாதார வல்லுனர்கள் விடுக்கும் எச்சரிக்கை

 


இத்தாலியில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பெரும்பாலான பகுதிகளில் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

சமீபத்திய கொரோனா தரவுகளை மதிப்பாய்வு செய்த பின்னர், 11 பகுதிகளை ஆரஞ்சு நிறத்தில் இருந்து மஞ்சள் மண்டலங்கள் என மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இத்தாலிய மக்கள் மிக சுதந்திரமாக பயணிக்க வாய்ப்பு அளிப்பதாக அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும், பகல் நேரத்தில் பார்கள் மற்றும் உணவகங்களை மீண்டும் திறக்க அனுமதிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

மொத்தத்தில், 16 பிராந்தியங்கள் மிகக் குறைந்த ஆபத்துள்ள மஞ்சள் மண்டலத்தில் இருக்கும், மேலும் பக்லியா, சார்டினியா, சிசிலி மற்றும் அம்ப்ரியா ஆகிய 4 பிராந்தியங்கள் ஆரஞ்சு மண்டலத்தில் இருக்கும் என தெறிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் எந்த பகுதியும் சிவப்பு மண்டலம் என வகைப்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் முதன்முதலில் கண்டறியப்பட்ட மிகவும் பரவக்கூடிய உருமாறிய கொரோனா வைரஸின் வழக்குகள் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

இந்நிலையில், சில மருத்துவ வல்லுநர்கள் இது விதிகளை தளர்த்துவதற்கான நேரம் அல்ல என்று எச்சரித்துள்ளனர்.

இந்த தளர்வுகள் மீண்டும் அதிக பாதிப்புகளையும், இறப்புகளையும் ஏற்படக்கூடிய அதிக வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.