சிம்பு பட்டத்தை பிரேம்ஜிக்கு கொடுத்த பிக்பாஸ் நடிகர்!
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை நடிகர் சிம்பு திரைப்படங்களில் பயன்படுத்தி வந்தார் என்பதும் தற்போது அவர் சிலம்பரசன் டிஆர் என்று மட்டுமே தனது பெயரை திரையில் பயன்படுத்தி வருகிறார் என்பதும் தெரிந்தது
இந்த நிலையில் லிட்டில் சூப்பர் ஸ்டார் பட்டத்தை சிம்புவின் நெருங்கிய நண்பரும் பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவருமான மகத், பிரேம்ஜி அமரனுக்கு கொடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகரும் சிம்புவின் நெருங்கிய நண்பருமான மகத் சற்று முன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது நண்பர்களுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்
அந்த புகைப்படத்தில் சிம்பு, இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி அமரன் ஆகியோர் உள்ளனர். இந்த புகைப்படத்தை பதிவு செய்த மகத், ‘மாநாடு டீமில் உள்ள என்னுடைய விருப்பத்திற்கு உரிய நண்பர்கள் என்றும் ’தலைவன்’ சிலம்பரசன் என்றும் ’டார்லிங்’ வெங்கட்பிரபு என்றும் ’லிட்டில் சூப்பர் ஸ்டார்’ பிரேம்ஜி அமரன் அமரன் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்
இந்த டுவீட்டிற்கு ’மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ’லிட்டில் சூப்பர் ஸ்டார் பிரேம்ஜி அமரன் தானா? என்று கேள்வி கேட்க, அதற்கு ’ஆம் அண்ணா, இந்த புகைப்படத்தில் உங்களை நான் மிகவும் மிஸ் செய்கிறேன்’ என்று மகத் குறிப்பிட்டுள்ளார்
No comments