ஐஸ் கிரீமில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் …. சீனாவில் அறிவிப்பு
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வைரஸ் வௌவால் மற்றும் பாம்பில் இருந்து உருவானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் ஐஸ் கிரீமிலும் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் டியன்ஜின் மாநகராட்சியில் ஐஸ் கிரீம் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.
இந்த தொழிச்சாலைக்கு பால் நியூசிலாந்தில் இருந்தும், உக்ரைனில் இருந்தும் இறக்குமதி செய்யப்பட்டது.
அந்த ஐஸ் கிரீம் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ஐஸ் கிரீமில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளது.
இதனால், உடனடியாக அந்த ஐஸ் கிரீம் தொழிற்சாலை மூடப்பட்டது.
ஐஸ் கிரீம் தொழிற்சாலையில் வேலை செய்துவந்த யாரேனும் ஒருவரிடம் இருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, ஐஸ் கிரீம் தொழிற்சாலை மூடப்பட்டு அங்கு வேலை செய்துவந்த பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
No comments