இலங்கையில் தேங்காய் திருடிய நபருக்கு நேர்ந்த கதி..!
இலங்கையில் காலி-கந்தேவத்த பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் 21 தேங்காய்களை களவாடிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார்.
அந்த சந்தேகத்திற்குரிய நபர் 02 இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரை காலி நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேக நபர் காலி புகையிரத நிலைய அலுவலகத்திற்கு சொந்தமான இடத்தினில் உள்ள தேங்காய் மரமொன்றில் சட்டவிரோதமாக 21 தேங்காய்களை பறித்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே காவற்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சந்தேக நபர் மீண்டும் மார்ச் 18 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென்றும் நீதவானால் உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments