Header Ads

கடும் குளிரால் பாதிக்கப்படும் ஸ்பெயின் மக்கள்



 ஸ்பெயின் நாட்டில் கடந்த சில தினங்களாக கடுமையான பனிப்பொழிவு மற்றும் குளிர்ந்த காற்று வீசிவருகிறது.

இதன் காரணமாக நாட்டின் வெப்பநிலை வரலாறு காணாத அளவிற்கு மைனஸ் 32 டிகிரி செல்சியஸாக குறைந்து பதிவாகியுள்ளது.

வடகிழக்கு ஸ்பெயினில் லீடாவில் உள்ள எஸ்டானி-ஜென்டோவில் இந்த குறைந்தபட்ச வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய மற்றும் வடக்கு ஸ்பெயினில் எதிர் வரும் நாட்களில் கூடுதலான பனிப்பொழிவு இருக்கும் என்றும், வெப்பநிலை மேலும் குறையலாம் என எதிர்பார்ப்பதாகவும் State Meterololgical Agency தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், வடக்கு ஸ்பெயினில் உள்ள லூகோ மாகாணத்தில், 75 வயது முதியவர் ஒருவர் பனிப்புயலில் தனது கார் சிக்கிக்கொண்டதால் அங்கிருந்து இறங்கி நடந்து செல்ல முயற்சித்தவரை Navia de Suarna பொலிஸ் விரைவாக சென்று மீட்டுள்ளனர்.

வரலாறு காணாத பனிப்பொழிவால் ஸ்பெயின் மக்கள் மிகுந்த குளிரில் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.