இத்தாலியில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் அரங்கேறிய கொடூரம்
இத்தாலியில் விலங்குகள் மற்றும் பாரம்பரிய இடங்களைப் பாதுகாப்பதற்காக பட்டாசுகளை வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் தடையை மக்கள் அனைவரும் புறக்கணித்து பட்டாசுகளை வெடித்துள்ளனர்.
இத்தாலியின் தலைநகரான ரோமில், புத்தாண்டை கொண்டாடும் விதமாக மக்களால் பட்டாசுகள் மற்றும் வான வேடிக்கைகள் வெடிக்கப்பட்டது.
இதனால், நூற்றுக்கணக்கான பறவைகள் இருந்த நிலையில் ரோம் நகரின் சில தெருக்களில் சாலை முழுவதும் உயிரிழந்த நிலையில் பறவைகள் பகாணப்பட்டுள்ளது.
பறவைகள் கொத்து கொத்தாக இறந்து கீழே விழும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவிவருகின்றன.
பறவைகள் இறந்ததற்கான காரணம் உறுதிப்படுத்தப்படவில்லை.
ஆனால் விலங்குகளை பாதுகாப்பதற்கான சர்வதேச அமைப்பு, பறவைகளுக்கு மிக அருகில் பட்டாசுகள் வெடித்தால், அவை பயத்திலும் அதிர்ச்சியிலும் இறந்துள்ளதாக தெரிவித்தது.
No comments