இலங்கை மக்கள் எதிர்நோக்கும் மற்றுமொரு பிரச்சினை
இலங்கையில் மழையுடனான காலநிலை காரணமாக, பயிர்ச்செய்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக மரக்கறிகளின் விலை அதிகரிப்பு, எதிர்வரும் மார்ச் மாதம் முற்பகுதி வரையில் நீடிக்கும் என ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆய்வு மற்றும் பயிற்சி மையம் தெரிவித்துள்ளது.
அந்த மையத்தின் ஆய்வு பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரஞ்சித் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
இதேநேரம், தம்புள்ளை பொருளாதார மையத்திற்கு தற்போதைய நாட்களில் கிடைக்கும் மரக்கறிகளின் அளவில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments