Header Ads

பிரான்சில் தயாரிக்கப்பட உள்ள கொரோனாத் தடுப்பு ஊசி!!

 


பிரான்சின் மருந்துத் தயாரிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான Sanofi நிறுவனம், பிரான்சில் தற்போது பயன்படுத்தப்படும் அமெரிக்க கொரோனாத் தடுப்பு ஊசியான Pfizer - BioNTech இனைத் தயாரிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
தற்போது ஐரோப்பா முழுவதிற்குமான Pfizer - BioNTech கொரோனத் தடுப்பு ஊசி பெல்ஜியத்தின் நிறுவனம் ஒன்றிலேயே தயாரிக்கப்படுகின்றது. இதனால் பெரும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. முக்கியமாகப் பிரான்சிற்கான விநியோகம் பெரிதும் தடைப்படுள்ளது.
 
 
அரசாங்கம் தொடரச்சியான கேள்வியாணைகளையும் நிதி ஆய்வுகளையும் மேற்கொண்டதன் பின்னர்,  தாங்கள் Pfizer - BioNTech தடுப்பு ஊசிகளைத் தயாரிக்க உள்ளதாகவும், 2021 இறுதிக்குள் 100 மில்லியன் தடுப்பு ஊசிகளைத் தம்மால் ஐரோப்பாவிற்கு வழங்க முடியும் எனவும் பிரான்சின் மருந்து தயாரிப்பு நிறுவனமான Sanofi யின் தலைமை இயக்குநர் Paul Hudson தெரிவித்துள்ளார்.

 

No comments

Powered by Blogger.