Header Ads

பிரித்தானிய மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி

 


பிரித்தானியாவில் சமீப நாட்களாக ஒரு நாளைக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

மேலும் தேசிய ஊரடங்கு அமுலில் இருந்தும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் உள்ளது.

இந்நிலையில், பிரித்தானிய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்று கலங்கடிக்கும் வகையில் அமைந்துள்ளது.

தற்போதைய சூழலில் மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக, அடுத்த மாத இறுதிக்குள் மேலும் 46,000 மக்கள் இறக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

மட்டுமின்றி, படுக்கை வசதி இல்லாத காரணத்தால், அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்னொரு 18,000 பேர் இறக்க வாய்ப்புள்ளதாகவும், அதில் அதிகமானோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும், ஊரடங்கு ஏற்படுத்தியுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அடுத்த சில ஆண்டுகளில், இன்னொரு 40,000 மக்கள் இறக்க வாய்ப்புள்ளதாக அரசாங்கம் மதிப்பீடு செய்துள்ளது.

கொரோனா பாதிப்பு இல்லாமலேயே மருத்துவ நிர்வாக குளறுபடிகளால், மொத்தமாக 105,000 பேர் இறக்க நேரிடும் என நிபுணர்கள் மதிப்பீடு செய்துள்ளனர்.

இதுவரை வெளியிடப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில், கொரோனாவால் சிகிச்சை பலனின்றி 103,000 பேர் மரணமடைந்துள்ளனர்.

ஆனால் அடுத்த மாத இறுதிக்குள் இந்த இறப்பு எண்ணிக்கையானது 122,000 என அதிகரிக்கும் என அரசு அதிகாரிகள் மதிப்பீடு செய்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக அரசாங்கம் மதிப்பீடு செய்துள்ள 222,000 இறப்பு எண்ணிக்கையில், இந்த மார்ச் மாதத்திற்குப் பிறகு 61,000 இறப்புகள் நடக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.