பிரான்ஸ் Aubervilliers : ஊரடங்கு வேளையில் பொலிஸாரின் விருந்து மது மாது கொண்டாட்டம் !!
ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் போது Aubervilliers நகர காவல்நிலையத்தில் விருந்து விழா கொண்டாடப்பட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விருந்து விழா கடந்த வாரத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் Aubervilliers நகர காவல்நிலையத்தில் பணிபுரியும் அனைத்து காவல்துறையினரும் ஒன்றிணைந்து விருந்து ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். முழு ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் போது, எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி, முகக்கவசங்கள் அணியாமலும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கொண்டாட்டம் காணொளியாக பதிவு செய்யப்பட்ட நிலையில், நேற்று புதன்கிழமை சக ஊடகம் ஒன்றினால் வெளியிடப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து இந்த விருந்து விழா சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல எதிவினை கருத்துக்களை மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
அதைத் தொடர்ந்து, உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments