30க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ள உருமாறிய கொரோனா தொற்று
சீனாவில் உருமாறிய கொரோனா தொற்று பல நாடுகளை பெரும் அச்சத்தில் கொண்டு சென்றுள்ளது.
இந்நிலையில் லண்டனில் உருமாறிய புதிய கொரோனா மேலும் அபாயமான கட்டதை்திற்கு உலகத்தை இட்டுச்செல்லும் என நிபுணர்கள் நம்புகின்றனர்.
இந்த அதிவேகதொற்றுத் திறன் உடையதாக கருதப்படும் லண்டன் மரபணு மாற்ற கொரோனா வைரஸ், உலகில் 30 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா, துருக்கி, அயர்லாந்து மற்றும் சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இந்த வைரஸ் பரவல் உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், வியட்நாமும் அந்த பட்டியலில் கடைசியாக சேர்ந்துள்ளது.
பிரித்தானியாவில் இருந்து வந்த பெண்மணி ஒருவருக்கு இந்த தொற்று உறுதியானதாக வியட்நாம் அரசு தெரிவித்துள்ளது.
அதே போன்று அமெரிக்காவில், குறைந்தது மூன்று மாநிலங்களில் மரபணு மாற்ற கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
No comments