மலைக்குன்றில் இருந்து கீழே விழுந்த பேருந்து! 19 பேர் பலி
பிரேசிலில் பரானா மாகாணத்தில் பேருந்து ஒன்று மலைக்குன்றில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
அங்கு 53 பயணிகளை ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது.
அப்போது திடீரென அந்த பேருந்து நிலைதடுமாறி அருகில் இருந்த மலைக்குன்றில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த பேருந்தில் பயணம் செய்த 19 பேர் உயிரிழந்தனர்.
மேலும் பலர் காயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து பற்றி தகவல் அறிந்ததும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளனர்.
No comments