பிரித்தானியாவில் கொடூரத் தாக்குதல்! 13 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி
பிரித்தானியாவில் மான்செஸ்டரின் லாங்சைட் பகுதியில் அமைந்துள்ள ஆஸ்டா கார் நிறுத்துமிடத்தில் நேற்று இரவு 7 மணிக்கு இந்த கொடூர தாக்குதல் நடைப்பெற்றுள்ளது.
அந்த தாக்குதலின் போது 13 வயது சிறுவன் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளான்.
தற்போது அபாயகட்டத்தை கடந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் தெரிவிக்கையில், நீளமான ஆயுதங்களுடன் நால்வரை சேர்ந்த கும்பல் அந்த சிறுவனை அணுகியதாகவும், பின்னர் சரமாரியாக தாக்கிவிட்டு, அந்த கும்பல் தப்பியதாகவும் கூறியுள்ளனர்.
நால்வரும் கருப்பு நிற உடை அணிந்து காணப்பட்டதுடன் அவர்கள் மாஸ்க் அணிந்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.
ஆனால் இந்த விவகாரம் தொடர்பில் இதுவரை எவரையும் பொலிசார் கைது செய்யவில்லை.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் உதவ வேண்டும் எனவும் பொலிசார் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
No comments