Header Ads

வலி கிழக்கில் பிரதேச சபையினால் இன்றும் இடர்நீக்கல் பணி முன்னெடுப்பு




வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் அனர்த்தத்தின் பின்னரான சீராக்கல் களப்பணிகள் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.


நிலவிய காலநிலைச் சீர்கேட்டினால் வலிகாமம் கிழக்கில் பல பகுதிகள் தாழ்நிலமாகவும் வீதி பெருந்தெருக்களின் அபிவிருத்திப்பணிகளின் போது போதுமான பாலங்கள் அமைக்கப்படாமை, வடிகால்கள் அமைக்கப்படாமை காரணமான வெள்ள அனர்த்தத்திற்குள் சிக்கியுள்ளன. இந் நிலையில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை முழுநேரமாக வெள்ளத்தினை குடியிருப்புக்களில் இருந்து வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது.  


இப் பணிகள் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் பிரதேச சபை உறுப்பினர்கள், பணியாளர்கள், கிராமசேவையாளர்கள், கிராம மட்டத் தலைவர்கள் உள்ளிட்டவர்களின் பங்கேற்புடன் மேற்கொள்ளப்படுகின்றது.


இன்றைய தினமும் இருபாலை, கோப்பாய், நீர்வேலி, சிறுப்பிட்டி, புத்தூர், அச்சுவேலி பகுதிகளில் வெள்ளத்தணிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.


பிரதேச சபையின் வளங்கள் முழுமையாக அனர்த்தத் சீராக்கல் பணிக்கு பயன்படுத்தப்படுகின்றன. கனரக ஜே.சி.பி போன்ற இயந்திரங்களையும் ஈடுபடுத்தி வெள்ள அனர்த்தச் சீராக்கல் பணிகள் இடம்பெறுகின்றன. இக் காலப்பகுதியில் பிரதேச சபையின் பணியாளர்கள் இரவு பகல் உணவு வேளை சேவையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க

No comments

Powered by Blogger.