Header Ads

பிரித்தானியாவில் நீக்கப்படும் கொரோனா கட்டுப்பாடுகள்…?

 



பிரித்தானியாவில் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு தொடர்ந்து வழங்கப்படுகின்றது.

திங்கட்கிழமை ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு அனுமதி கிடைக்கும் என நம்பப்படுகிறது.

இந்த நிலையில், பிரித்தானியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கை மொத்தமாக நீக்கப்படும் என அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு இலக்கான 15 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்ட பின்னர், உடனடியாக அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க போரிஸ் அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி மாதத்திற்குள் இந்த 15 மில்லியன் என்ற இலக்கை எட்ட முடியும்.

பெப்ரவரி மாதத்திற்கு பின் பிரித்தானியாவில் கொரோனா அபாயம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக ஒரு தடுப்பூசிக்கு சில ஆண்டுகள் எடுத்துக் கொள்ளப்படும் என்ற நிலையில், பிரித்தானிய விஞ்ஞானிகள் வெறும் 9 மாதங்களில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர்.

பலகட்ட சோதனையிலும் நிரூபணமான நிலையில், தற்போது அரசாங்கத்தின் அனுமதிக்காக காத்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்க

No comments

Powered by Blogger.