Header Ads

பிரான்ஸில் புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்க அரசின் முக்கிய நடவடிக்கை

 


பிரான்ஸ் இதுவரை 2.6 மில்லியன் கொரோனா தொற்றுகளைப் பதிவு செய்துள்ளது,

மேலும் 64,000க்கும் அதிகமான இறப்புகளையும் கொண்டுள்ளது.

இந்நிலையில் பிரான்ஸ் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

பிரான்சில் புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு 8 மணிமுதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கடவுள்ளது.

மேலும், நகரங்களின் முக்கிய மையப்பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளின் முக்கிய இடங்களில், பொது வெளியில் யாரும் கூட்டம் கூடாமல் தடுக்க 100,000 பொலிஸ் கொண்ட படைகளை நிறுத்தவுள்ளது.

பாரிஸில் மாலை முதல் பாதி மெட்ரோ ரெயில் பாதைகள் மூடப்படும்.

மேலும் நாடு முழுவதும் பெரும்பாலான பொது போக்குவரத்துகள் நிறுத்தப்படும்.

பிரான்சில் புத்தாண்டு இரவில் பல இடங்களில் கார்களை எரிப்பது போன்ற சட்டவிரோத சம்பவங்கள் நடப்பது இயல்பான செயல்களை தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.