எதிர்வரும் வாரங்களில் உச்சமாகும் கொரோனாத் தொற்று - பொதுச் சுகாதார நிறுவனம்!!
எதிர்வரும் வாரங்களில் பிரான்சில் கொரோனத் தொற்று மிக அதிகமாகும்பெரும் ஆபத்து உள்ளதென என பிரான்சின் பொதுமக்கள் சுகாதார நிறுவனமான Santé publique France எச்சரித்துள்ளது.
தங்களது வாராந்த கொரோனாத் தொற்று நோய் தரவறிக்கையின் போது இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த நான்கு வாரங்களாகத் தொற்று வீதம் கணிசமாகக் குறைந்து வந்துள்ளது.
30ம் நவம்பர் முதல் டிசம்பர் முதல் வாரத்திற்குள், கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை, 72.121 ஆக இருந்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் இது 76.500 ஆக இருந்துள்ளது.
ஆனால் கொண்டாட்டக் காலங்களில், மக்களின் அவதானமின்மையாலும், எச்சரிக்கையின்மையாலும் தொற்றுக்கள் அதியுச்சமாக அதிகரிக்கும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
No comments