கடந்த 24 மணிநேரம் - 175 சாவுகள் -அதிகரிக்கும் தொற்றுக்கள்!!
அரசாங்கம் நாளொன்றிற்கு 5.000 பேரிற்கும் குறைவாகவே தொற்றுக்கள் இருக்குமாறு கட்டுப்படுத்தவோம் என இலக்கு வைத்திருக்க, நாள்hந்தத் தொற்றுக்கள் இரண்டு மடங்கிற்கும் மிக அதிகமாகவே தொற்றுக்கள் ஏற்படுகின்றன.
கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாத் தொற்றினால் 175 பேர் சாவடைந்துள்ளனர்.
பிரான்சில் கொரோனாத் தொற்றினால் சாவடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது கடந்த 24 மணிநேரச் சாவுகளுடன் 55.156 ஆக உயர்ந்துள்ளது.
இதில் வைத்தியசாலைகளில் மட்டும் 37.970 பேர் கொரோனாவால் சாவடைந்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை பல ஆய்வு கூடங்கள் மூடப்பட்டு, தொற்றின் பெறுபேறுகள் கிடைகக்கப்படாத நிலையிலும் கூட, இன்று கடந்த 24 மணிநேரத்திற்குள் 11.022 பேரிற்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று இது 13.000 ஆக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
26.262 கொரோனா நோயாளிகள் தற்போது வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்திற்குள் மட்டும் 627 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீவிர சிகிச்சைப்பிரிவில் 3.210 கொரோனா நோயாளிகள் உயிராபத்தான நிலையில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்திற்குள் மட்டும் 101 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
No comments