Header Ads

சந்தாங்கேணி விளையாட்டு மைதான அபிவிருத்திப்பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது.




கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதான அபிவிருத்திப் பணியினை முழுமைப்படுத்தும்வகையில் நவீன பார்வையாளர் அரங்கு மற்றும் உள்ளக விளையாட்டரங்கு போன்றவற்றை அமைக்கும் வேலைத்திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கையினை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் முன்னெடுத்துள்ளார். 

விளையாட்டுத்துறை அமைச்சு அதிகாரிகளுடன் இன்று (7) சனிக்கிழமை காலை நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மேற்படி விரைவுபடுத்தும் நடவடிக்கையினை மேற்கொண்டார்.  

சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முழுமைப்படுத்தும் வகையில் அதற்கான வரைபடங்களை தாயரிக்கும் பணி பூர்த்தியாக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் குறித்த மைதானத்திற்கான நவீன பார்வையாளர் அரங்கு மற்றும் உள்ளக விளையாட்டரங்கு போன்றவற்றிற்கான வரைபடங்கள் பூரணப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வேலைத்திட்டங்களை விரைவில் ஆரம்பிக்கும்வகையில் ஒப்பந்தகாரர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. இவ்வேலைத்திட்டங்களுக்கு 300 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

No comments

Powered by Blogger.