Header Ads

ஈராக் தூதுவரிடம் கண்டி மற்றும் அம்பாறை வன்முறை தொடர்பில் பிரதி அமைச்சர் ஹரீஸ் விபரிப்பு





இலங்கைக்கான ஈராக் நாட்டின் தூதுவர் அகமட் ஹமீட் அல் ஜுமைல் இன்று (19) திங்கட்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீசை விளையாட்டுத்துறை அமைச்சு அலுவலகத்தில் சந்தித்து இலங்கை மற்றும் ஈராக் நாடுகளுக்கிடையிலான நட்புறவு சம்பந்தமாக கலந்துரையாடினார்.

இதன்போது அண்மையில் கண்டி மற்றும் அம்பாறை பிரதேசங்களில் முஸ்லிங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறை தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக பிரதி அமைச்சர் ஹரீஸ் விபரித்தார். மேலும் குறித்த சம்பவங்களின்போது பள்ளிவாசல்கள், முஸ்லிங்களின் வீடுகள், வியாபார நிலையங்கள் எரியூட்டப்பட்டமை மற்றும் தற்போதைய பாதுகாப்பு நிலைமை என்பன தொடர்பில் விபரமாக எடுத்துக் கூறினார்.

அத்தோடு இலங்கை மற்றும் ஈராக் நாடுகளுக்கிடையிலான பரஸ்பர விளையாட்டு அபிவிருத்தி தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது

No comments

Powered by Blogger.