Header Ads

பெண்களின் குரல்

பெண்கள் தினத்தை முன்னிட்டு  முஸ்லிம் இளம் பெண்கள் சங்கம் (வை.டபிள்யூ.எம்.ஏ) கொழும்பு தெமட்டகொட வை.எம்.எம்.ஏயில் எதிர்வரும் 17ஆம் திகதி காலை 9.30மணிக்கு பெண்கள் தினம் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.


வை.டபிள்யூ.எம்.ஏ தலைவி திருமதி பவாஸா தாஹா தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் பெண்கள் தொடர்பான பலவேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த விழாவுக்கு பிரதம விருந்தினராக ” பெண்களின் குரல்” இயக்கத்தின் தலைவியும் இலங்கை மாதர் சங்கம் இந்த மகளிர் மன்றம் ஆகியவற்றின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்று அதிகாரியுமான திருமதி மிதிலா பத்மநாதன் கலந்துகொள்கின்றார். சிறப்பு அதிதியாக சட்டத்தரணி கிசாந்தி ஜெயசிங்கவும் கலந்துகொள்கின்றனர்.

வை.டபிள்யூ.எம்.ஏ சங்கத்தின் அங்கம் வகிக்கும் பல்வேறு துறைகள்சார்ந்த பெண்களின் திறமைகளின் ஆற்றல்களும் இனம்காணப்பட்டு அவர்களுக்கு பரிசில்களும் விருதுகளும் இந்த நிகழ்வில் வழங்கப்படும். அத்துடன் அழகுக்கலை, சமயற்கலை ஆகியவை தொடர்பான செயன்முறைகளும் இது தொடர்பில் நிபுணத்துவம் பெற்றவர்களால் செய்து காட்டப்படவுள்ளன. அத்துடன் பெண்கள் தொடர்பிலான விழிப்பூட்டல் கருத்தரங்கும்  இந்த நிகழ்வில் கலந்துகொள்ளும் பார்வையாளர்களுடனான பகிரங்க கலந்துரையாடல்களும் நிகழ்வில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன

No comments

Powered by Blogger.